தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச்.4) தேர்தல் பரப்புரைக்காக வந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்தபோது, விக்னேஷ் (19) என்ற இளைஞர் நிலைதடுமாறி விழுந்து மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 5 பேர் விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விக்னேஷின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.