திருக்காட்டுப்பள்ளி: மின்மாற்றியில் 110 கிலோ செம்புக்கம்பி திருட்டு

68பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி: மின்மாற்றியில் 110 கிலோ செம்புக்கம்பி திருட்டு
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் கிராமத்தில் வயல் அருகில் இருந்த மின் மாற்றியில் இருந்து 110 கிலோ செம்புக்கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து நடுக்காவேரி உதவி மின் பொறியாளர் வீரசேகர் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி