திருவிடைமருதூர் தாலுகா மாங்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த மைதீன் பாஷா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கும்பகோணத்தைச் சேர்ந்த லலித்குமார் சேட்டு என்பவரின் குடோனிலிருந்து 25 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக லலித்குமார் சேட்டு, அவரது மனைவி சுதா, சதீஷ்குமார், எட்வின் மற்றும் மைதீன் பாஷா ஆகிய 5 பேரை திருநீலக்குடி போலீசார் கைது செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.