ஒரத்தநாடு: போலீசிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

61பார்த்தது
ஒரத்தநாடு: போலீசிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருவோணம் காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணுபிரசாத், காவலர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் டிசம்பர் 23 அன்று ஊரணிபுரம் கடைவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த காடுவெட்டிவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை (27), வெங்கடேஷ் (27) ஆகிய இருவரும் போலீசாரிடம் தகராறு செய்து, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். 

இதுகுறித்து போலீசார் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணுபிரசாத் வழக்கு பதிவு செய்து போலீசாரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ராஜதுரை மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.