ஒரத்தநாடு அருகே உளூர் சரகம் நெய்வாசல் தென்பாதி கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று மாலை அனைத்து தாலுக்கா அலுவலகங்களில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.