தஞ்சாவூர் குறுவை சாகுபடி வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்

67பார்த்தது
தஞ்சாவூர் குறுவை சாகுபடி வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்
கல்லணைக்கு அருகே அமைந்துள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ்துளைக்கிணறு தண்ணீரைக் கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் செய்துள்ளனர். கடுமையான கோடை வெயிலில் நடவு பணிகளையும், உழவு பணிகளையும் விவசாயிகள் செய்திருந்தனர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்த மழை காரணமாக நடவு செய்யப்பட்ட குறுவைப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. நேற்று முன்தினம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் வேளாண் பணிகளை காலம் தவறாமல் விவசாயிகள் செய்து வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி பகுதியில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். களை எடுத்த வயல்களில் உரமிடும் பணிகளிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக உயர்ந்துள்ள நிலையில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கால்வாய் பாசன விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி