கும்பகோணம் அருகே ஆவூரைச் சேர்ந்த அப்துல் ரஷீத் (62) தனது மனைவி தௌலத் நிஷாவுடன் (57) நேற்று பாய்க்கில் மயிலாடுதுறையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார். திருபுவனம் மெயின் ரோடு அருகே முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக பைக் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தௌலத் நிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அப்துல் ரஷீத் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் கிருஷ்ணதாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.