தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தவறி விழுந்து பெண் காயம்

72பார்த்தது
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தவறி விழுந்து பெண் காயம்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு வந்துவிட்டு, பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டது. இதனிடையே, தஞ்சாவூர் பி.டபிள்யூ.டி. நகரைச் சேர்ந்த ஸ்ரீகா (42) இந்த ரயிலில் தனது சகோதரியை ஏற்றிவிட்டு ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார். 

ரயில் புறப்பட்டபோது, தடுமாறிய ஸ்ரீகா ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்தார். இதனால், ரயிலில் அபாய சங்கிலியை சிலர் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். அங்கிருந்த காவல்துறையினர் ஸ்ரீகாவை மீட்டனர். காயமடைந்த ஸ்ரீகா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.