சிவகங்கை மாவட்டம், இளங்குடி புதூரைச் சேர்ந்த அப்துல்ரகுமான் (49) என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து தனியார் பேருந்தில் புறப்பட்டு, சனிக்கிழமை காலை 7 மணி அளவில் ஒரத்தநாடு வந்து இறங்கி, திருவோணம் பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு, அவரிடமிருந்த ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.