அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்.

1பார்த்தது
அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி தலைமையிலும், பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான துரை. சண்முகபிரபு முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான என் ஆர் சிவபதி கலந்துகொண்டு வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் இளமதி சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் கண்ணபிரான், பொதுக்குழு உறுப்பினர் மோகன், பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய நகர செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாபநாசம் பேரூர் செயலாளர் கோவி. சின்னையன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி