தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சோழ மன்னன் இரண்டாம் ராஜ ராஜனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில், மூலவர் ஐராவதீஸ்வரருக்கு 108 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட சாதம், 11 வகையான பழங்கள், 21 கிலோ காய்கறிகள், 51 கிலோ வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகாதீப ஆராதனைக்கு பின்னர் அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.