தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே குடமுருட்டி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் சங்கரபாண்டி (19) எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மாணவரைத் தேடி வந்த நிலையில், அவரது உடல் ஆற்றோரம் மிதந்து வந்ததைக் கண்டெடுத்து மீட்டனர். பாபநாசம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.