பாபநாசம், குப்பைமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சங்கரபாண்டி (19), கும்பகோணம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது நண்பருடன் பாபநாசம் ஏபிஎம் நகர் குடமுருட்டி ஆற்றின் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மாணவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாபநாசம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.