தஞ்சாவூரில் காங்கிரஸார் நாளை உண்ணாவிரதம்

1பார்த்தது
தஞ்சாவூரில் காங்கிரஸார் நாளை உண்ணாவிரதம்
தஞ்சாவூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ஜி ராஜேந்திரன், 100 நாள் வேலை சட்டத்தை சிதைத்து, காந்தியின் பெயரை மாற்றி, கிராம மக்களின் அதிகாரத்தைப் பறித்து, கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். இதைக் கண்டித்து, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே ஜனவரி 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி வரை பல்வேறு இயக்கங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி