போராட்டத்திற்காக தஞ்சை சென்ற மாற்றுத்திறனாளிகள்

0பார்த்தது
போராட்டத்திற்காக தஞ்சை சென்ற மாற்றுத்திறனாளிகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.6,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆந்திரா அரசு வழங்குவதை போன்று தமிழ்நாட்டிலும் உதவித்தொகை வழங்கக் கோரி, சென்னை விருந்தினர் மாளிகை முன்பாக நடைபெறும் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்க தஞ்சை மாவட்டத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் நேற்று புறப்பட்டு இன்று சென்னை சென்றடைந்தனர். மாவட்டச் செயலாளர் பி. எம். இளங்கோவன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.