திருக்கருக்காவூரில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்பு.
100-நாள் வேலை உறுதித் திட்டம் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 4034-கோடி ரூபாய் நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கருக்காவூர் கடைவீதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக. சுரேஷ் தலைமையிலும், மெலட்டூர் நகர செயலாளர் சீனிவாசன் முன்னிலையிலும் 500-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி, பதாகைகளை கையில் ஏந்தியவாறு பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் ராம்நாத், கணேசன், ராஜேந்திரன் ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், சேகர், கருணாநிதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜதுரை, முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.