போலியான இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது: சைபர் கிரைம்

407பார்த்தது
போலியான இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது: சைபர் கிரைம்
தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் படித்தவர், படிக்காதவர் என அனைவரும் சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்படுகின்றனர். நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்யச் சொல்லுதல் போன்ற குற்றங்களைத் தடுக்க 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் cybercrime.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம். முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல், பொது வைஃபையைப் பயன்படுத்தாமல், போலி இணைப்புகளை கிளிக் செய்யாமல், வங்கியில் இருந்து பேசுவதாக வரும் ஓடிபி அழைப்புகளை ஏற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.