பாபநாசம் டிஜிட்டல் அரெஸ்ட் என முதியவரிடம் 93 லட்சம் மோசடி

3பார்த்தது
பாபநாசம் டிஜிட்டல் அரெஸ்ட் என முதியவரிடம் 93 லட்சம் மோசடி
பாபநாசம் அருகே நகைக்கடை நடத்தி வரும் முருகப்பன் (70) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி போலியாக சிம் கார்டுகள் வாங்கி பாலியல் குற்றம் மற்றும் ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம் என்றும் மிரட்டி பல தவணைகளாக ரூபாய் 93 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் தஞ்சை மாவட்ட இணையதள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோல் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி