பாபநாசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 12.47 லட்சத்தை இணையவழி மோசடி கும்பல் அபேஸ் செய்துள்ளது. ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் செலுத்தக் கோரி வந்த குறுந்தகவலைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப் குழுவில் வந்த போலி லிங்க்கை நம்பி பதிவிறக்கம் செய்த விவசாயி, தனது வங்கி விவரங்களைப் பதிவிட்ட சில நிமிடங்களில் செல்போன் ஹேக் செய்யப்பட்டு, வங்கிக் கணக்கிலிருந்து 9 தவணைகளாகப் பணம் திருடப்பட்டது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெரியாத லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.