தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய பாலசுப்பிரமணியன் (29), எட்டாம் வகுப்பு மாணவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் பெற்றோர் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.