தஞ்சை மாவட்டத்தில் சம்பா தாளடி 3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. இந்நிலையில் நெற்கதிர்களை அறுவடை செய்ய இயந்திரங்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மழை, ஆட்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்ட விவசாயிகள், காலத்தே விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்களை தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுவதோடு, காலத்தோடு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலர் செந்தில்குமார் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக போதுமான அறுவடை இயந்திரங்களை மாவட்டத்திற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.