மனைவியை தீ வைத்து கொன்ற வழக்கில் கணவர் கைது

2பார்த்தது
மனைவியை தீ வைத்து கொன்ற வழக்கில் கணவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழகஞ்சிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தன்னைப் பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்த மனைவி வினோதினி (34) மீது, கடந்த 28-ஆம் தேதி இரவு டீசல் ஊற்றித் தீ வைத்தார். கபிஸ்தலம் பகுதியில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி, திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கபிஸ்தலம் காவல் துறையினர் இவ்வழக்கைக் கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்த கணவர் ராஜ்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி