தஞ்சை மாவட்ட தனித்தேர்வர்களுக்கான முக்கியச் செய்தி

0பார்த்தது
தஞ்சை மாவட்ட தனித்தேர்வர்களுக்கான முக்கியச் செய்தி
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வெழுதும் தனித்தேர்வர்கள், தங்களுக்கான அனுமதிச்சீட்டுகளை நாளை பிப்ரவரி 23-ஆம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களின் விவரங்களை உள்ளீடு செய்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே அனுமதிச்சீட்டு மட்டுமே வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே அடுத்த வாரம் அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி