பொதுமக்கள் வசதிக்காக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் மின் தூக்கி (லிப்ட்) பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் பணிகள் சற்று காலதாமதம் ஆகிறது. காலதாமதத்திற்கான காரணம் குறித்து நாளை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மருதமலைக்கு ஒரு மின் தூக்கி (லிப்ட்) உருவாகி வருகிறது என்றும் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் லிப்ட் சேவையில் ஒரு கட்ட பணிகள் நிறைவு பெற்றுவிட்டன என்றும், இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு மேலும் தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சியில் தான் சொக்கலிங்கர் நரசிங்க பெருமாள் ஆலயத்திலும், அய்யர் மலைகளிலும் ரோப் கார் சேவைகள் தொடங்கப்பட்டது என்றும், திருக்கழுகுன்றம், திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களுக்கு புதிய ரோப் கார் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பக்தர்கள் வசதிக்காக பழனி மலையில் மேலும் ஒரு ரோப் கார் சேவை புதிதாக அமைக்கப்பட உள்ளது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேலும் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சியில் நாளை நாகை மாவட்டம் திருப்புகழூரில் 3000ஆவது கோவில் குடமுழுக்கு நாளை நடைபெறுவதாகவும் அமைச்சர் சேகர்பாபு மேலும் தெரிவித்தார்.