மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது தந்தையின் படத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று (18 ஆம் தேதி) தஞ்சாவூருக்கு வருகை தர உள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞரணி செயலாளரும், கவிஞருமான சினேகன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவரது தந்தை ம. சிவசங்கு (102) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது படத்திறப்பு விழா செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்கரியப்பட்டியில் இன்று நடைபெறுகிறது. இதில் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார்.