தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மணல்மேடு கிராமத்தில் மேலத்தெருவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இருந்து குருசாமி சிவானந்தம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவையாறு சாலையின் மார்க்கமாக பாதயாத்திரை மேற்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
பின்னர் அங்கிருந்து ஊர் திரும்பிய சமயபுரம் மாரியம்மன் கோவில் பாதயாத்திரை பக்தர்கள் மணல்மேடு கிராமத்திற்கு திரும்பி அங்கு உள்ள சமயபுரம் மாரியம்மன் மற்றும் பேச்சி அம்மன் சாமிக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பூஜை செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அசைவ உணவு தயார் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பாபநாசம் அருகே ராஜகிரி மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை ஆக சென்றபோது எடுத்த படம்.