சுவாமிமலையில் திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் கூட்டம்

585பார்த்தது
சுவாமிமலையில் திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் கூட்டம்
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர் வேணுகோபால் வரவேற்று பேசினார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், தலைமை கழக பேச்சாளர்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், குடந்தை ராமகிருஷ்ணன் மற்றும் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் ஆடுதுறை உத்திராபதி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள், சார்பணி அமைப்பாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கூட்ட நிறைவாக மாவட்ட துணைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி