அம்மாப்பேட்டை அருகே கோவிலூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாராயணசாமி (வயது 55). சம்பவத்தன்று இவர் தஞ்சைக்கு சென்று விட்டு இரவு 9 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் கோவிலூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் கத்தரிநத்தம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது நாராயணசாமி சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணசாமி புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.