பாபநாசம்: தடை செய்யப்பட்ட 150 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

3பார்த்தது
பாபநாசம்: தடை செய்யப்பட்ட 150 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், பணியாளர் பாலு ஆகியோர் வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். பாபநாசம் கடை வீதியில் சரக்கு வாகனம் மூலம் கடைகளுக்கு பாலித்தீன் பைகள் வினியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த 150 கிலோ பாலித்தீன் பைகளை பேரூராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி