தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே. எஸ். முகமது இப்ராஹிம், பாபநாசம் வட்டம், சரபோஜிராஜபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் தெரு மற்றும் அருகே உள்ள தெருவில் பழுதடைந்த ஆழ்துளை குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.