குலமங்கலம்: குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
குலமங்கலம்: குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குலமங்கலம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் அய்யம்பேட்டை அருகே, சூலமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கதொட்டி ஒன்று உள்ளது. இந்தக் குடிநீர் தொட்டி மூலம் 6 தெருக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த நீர் தேக்கதொட்டிக்கான மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சூலமங்கலம் ஊராட்சி அலுவலக முன்பு கிராம மக்கள் குடங்களை கைகளில் சுமந்தவாறு, மின் மோட்டார்க்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஜயலெட்சுமி மற்றும் அய்யம்பேட்டை போலீசார் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மின் மோட்டார் உடனடியாக சீரமைத்து சீரான குடிநீர் வினியோகம் தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி