தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் வசிக்கும் ஏழை, எளிய பட்டியலின மக்கள் விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்ட நிலையில், பட்டா வழங்கப்படாததால் இன்று குடும்பத்துடன் திரண்டு கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை மற்றும் போலீசார் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்துப் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.