தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இது போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என். வி. கண்ணன், ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கக் கோரியதாகவும், தற்போது அறிவிக்கப்பட்ட தொகை சாகுபடிச் செலவை ஈடுகட்டப் போதாது என்றும் கூறினார். முன்னோடி விவசாயி வி. மாரியப்பன், ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் கோரியதாகவும், ரூ. 30 ஆயிரம் அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.