தேங்கிக் கிடக்கும் நெல் மணிகள் கொள்முதல் செய்ய வேண்டுகோள்

524பார்த்தது
தேங்கிக் கிடக்கும் நெல் மணிகள் கொள்முதல் செய்ய வேண்டுகோள்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெலட்டூர் அருகே ரெங்கநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் குவியலாக தேக்கமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நெல் கொள்முதலை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சில கொள்முதல் நிலையங்களில் எடை அதிகமாக வைத்து கொள்முதல் செய்யப்படுவதாகவும், இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி