கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் இறப்பு வீட்டுக்கு வந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாரமங்கலம் அருகே உள்ள பரகநல்லூர் நங்கவல்லி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்பழகன்(வயது 32). இவரது நண்பர் இதே ஊரைச்சேர்ந்த மனோகரன் மகன் சேகர்(வயது 40) இருவரும் பட்டீஸ்வரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தவர்கள் இங்குள்ள திருமலைராஜன் ஆற்றில் குளித்தனர்.
அப்போது நீரில் மூழ்கிய அன்பழகனை காணவில்லை. இது பற்றி சேகர் அருகில் இருந்தவர்களிடம் கூறவே தேடிப்பார்த்து அன்பழகன் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்.