தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சந்தானபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மஹா காளியம்மன் கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நிறைவடைந்து, இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து, நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று, வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் சந்தானபுரம் கிராமத்தினர், நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.