பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலெட்சுமி, ஆசிரியர் பிரதிநிதிகள், பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். பள்ளி வளாகம், கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்தல், திறன் வகுப்பு மாணவர்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல், பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து வரவழைத்தல், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல், மாற்றுத்திறனாளி மாணவர்களை முகாமிற்கு அழைத்துச் செல்லுதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு சதவீதம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.