தஞ்சாவூா் அருகே புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கிடங்கில் வேளாண் துறை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) செ. செல்வராசு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, 30 ஆயிரத்து 970 கிலோ குருணை வடிவிலான உரமும், 550 லிட்டா் திரவ வடிவிலான உரமும் இருந்தன. உற்பத்தி மற்றும் விற்பனை விவரங்கள் உரிய முகவரிகளுடன் இருந்தும், விற்பனை உரிமம் பெறப்படாததால், ரூ. 62. 25 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகளையும், திரவ உர பாட்டில்களையும் உதவி இயக்குநா் செல்வராசு பறிமுதல் செய்து சீல் வைத்தாா்.