தஞ்சை-அரியலூர் புதிய ரயில் பாதை-எம். பி. முரசொலி வலியுறுத்தல்

1பார்த்தது
தஞ்சை-அரியலூர் புதிய ரயில் பாதை-எம். பி. முரசொலி வலியுறுத்தல்
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, காவிரி டெல்டா மாவட்டங்களின் ரயில்வே தேவைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். 90 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரியலூர் - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் - புதுக்கோட்டை ரயில் பாதை திட்டங்களை உடனடியாகத் தொடங்கி நிறைவேற்ற வேண்டும். தஞ்சாவூர் - விழுப்புரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மன்னார்குடி - பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். தஞ்சாவூர் மற்றும் மைசூர் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி