புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் சின்னையா, ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள் மற்றும் தோல் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் தஞ்சை மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சின்னையாவின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.