கோயில் உண்டியல்கள் உடைக்கும் திருடன் கைது

0பார்த்தது
கோயில் உண்டியல்கள் உடைக்கும் திருடன் கைது
கபிஸ்தலம் பாலக்கரையில் உள்ள சித்தி விநாயகர் ஆலய உண்டியலை உடைத்து பணம் திருடியதாக திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த ராமன் (24) என்பவரை கபிஸ்தலம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் பாபநாசம், திருநீலக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள ஆலயங்களிலும் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதும், அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு தாலிகளை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி