தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சோமேஸ்வரபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா 11 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சோமேஸ்வரபுரம் தூரிஆறு ஆற்றங்கரையிலிருந்து கரகம் காவடி, அலகு காவடி திரளான பக்தர்கள் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவில் அருகே உள்ள திடலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து தீக்குண்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் வீதி உலா வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சோமேஸ்வரபுரம் உள்ளாட்சி பிரதிநிதிகள், நாட்டாமைகள், கிராமவாசிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.