தஞ்சாவூரில் அரசுப் பேருந்து விபத்து: மூவர் காயம்

820பார்த்தது
தஞ்சாவூரில் அரசுப் பேருந்து விபத்து: மூவர் காயம்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்ற அரசு நகர பேருந்து மேரீஸ் கார்னர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்திற்குள் புகுந்தது. இதில் பேருந்துக்காகக் காத்திருந்த துரைராஜ் (54), அவரது மகன் அபிஷேக் (17) மற்றும் சோனாலி (23) ஆகிய மூவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தஞ்சாவூர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.