தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே தேவன்குடி மீனவர் காலனியைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி இளங்கோவன் (50), மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சக நண்பர்களான ராஜேஷ் (24) மற்றும் முத்துக்குமார் (24) ஆகியோரால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கபிஸ்தலம் போலீஸார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.