தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

1பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நவம்பர் 16 முதல் 21 வரை கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் நவம்பர் 16 அன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17 அன்று தஞ்சாவூரில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், நவம்பர் 16 அன்று தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி