அய்யம்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

0பார்த்தது
அய்யம்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகரஜோதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, குடமுருட்டி ஆற்றங்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 3 வாலிபர்களைக் கண்டனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றபோது, ஒருவரைப் பிடித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட ஹேம தீபன் (20) என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவரிடம் 12 கிலோ கஞ்சா விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹேம தீபனைக் கைது செய்து, தப்பி ஓடிய இருவரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி