மதுக்கூரில் லாட்டரி விற்ற 2 பேர் கைது

மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில், செல்வராஜ் என்பவருடைய பெட்டிக்கடையில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ் மற்றும் சூரியமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர்.
