கதண்டு வண்டுகள் கடித்த 6பேர் சிகிச்சை.. ,

557பார்த்தது
கதண்டு வண்டுகள் கடித்த 6பேர் சிகிச்சை.. ,
திருவோணம் அருகே காட்டாத்தி பகுதியில் கதண்டுகள் கடித்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி பாலசுந்தரி உட்பட பலர் கதண்டுகள் கடித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விவசாயி கல்யாணசுந்தரத்தின் இரண்டு ஆடுகள் கதண்டுகள் கடித்து உயிரிழந்தன. சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருப்பதால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கதண்டு கூடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி