கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தூரக்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும், படகுகளையும் உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியிலுள்ள பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.