பேராவூரணி அருகே, புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்

0பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொண்டிக்குளம் ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 34.10 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, சாலைப் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் தி. மு. க தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி. பழனிவேல் மற்றும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதி தூய்மைக் காவலர்களை துண்டு அணிவித்து கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி